பங்களதேஷில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ள நிலையில், மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டாக்கா உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் காக்ஸ் பசார் மாவட்டத்தில் வசிக்கும் ரோஹிங்கியா அகதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
