கொழும்பு மாநகர சபையின் (CMC) 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் (Budget) உள்ளடக்க வேண்டிய முன்மொழிவுகள் மற்றும் யோசனைகளைச் சமர்ப்பிக்குமாறு நகர வாசகர்களுக்கும் தன்னார்வ அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட வட்டாரங்கள் அல்லது உள்ளூர் பகுதிகளின் வளர்ச்சியை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளை வரும் 2026 ஓகஸ்ட் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாநகர சபை கேட்டுக்கொண்டுள்ளது.
சமர்ப்பிக்கப்படும் அனைத்து யோசனைகளும், நிதி ஒதுக்கீட்டின் சாத்தியக்கூறுகளுக்கு அமைவாகப் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோசனைகளை அனுப்ப வேண்டிய முகவரி: பொதுமக்கள் தங்கள் முன்மொழிவுகளைத் தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பின்வரும் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கலாம்:
தபால் முகவரி: மேயர் (Mayor), கொழும்பு மாநகர சபை, டவுன் ஹால், கொழும்பு 07.
மின்னஞ்சல் முகவரிகள்: [email protected] அல்லது [email protected]
