Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை மகளிர் அணி அபார வெற்றி!

ஆடி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 40 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணித்தலைவி பாத்திமா சனா 41 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் 188 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 37.2 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் சார்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம 71 ஓட்டங்களையும், அணித்தலைவி சமரி அத்தபத்து 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்தநிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் இலங்கை மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.

இதற்கமைய போட்டியில் நாயகியாக சமரி அத்தபத்து தெரிவுசெய்யப்பட்டதுடன், தொடரின் நாயகியாக ஹர்ஷிதா சமரவிக்ரம தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் சபை கூடுகிறது!

வைகாசி 27, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்ற ஸ்பெயின் அணி

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத சொத்துக்கள் பல முற்றுகை

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube