தியத்தலாவை, ஃபாக்ஸ் ஹில் பகுதிக்கு அண்மையிலுள்ள மலைத்தொடரில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை (27) ஏற்பட்ட இந்தக் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், தீ பரவிய உடனேயே இராணுவத்தினர் களமிறங்கி தீயை அணைக்கும் பணிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
