மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையைத் தொடர்ந்து, சிறைச்சாலை வளாகத்திற்குள் ஏற்பட்ட சேதங்களைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
சிறைச்சாலை வளாகத்தில் உள்ள பல சொத்துக்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான முழுமையான மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலைமையைத் தொடர்ந்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


