தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்ததன்படி, குறித்த சந்தேகநபர் நேற்று (29) தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய குறித்த உப பொலிஸ் பரிசோதகர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
