Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

மின்கோபுரத்தில் ஏறி போராட்டம்: மின்சார சபை இழப்பை செலுத்த உத்தரவு!

ஆடி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

குடும்பத் தகராறு காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபரால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கம்புருபிட்டிய பகுதியில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, குறித்த நபர் உயர் அழுத்த மின்சார விநியோகக் கட்டமைப்புக்குச் சொந்தமான கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனால் திஹகொட, கம்புருபிட்டிய, அக்குரஸ்ஸ, முலட்டியன, தேவேந்திரமுனை, மாவறல மற்றும் தெனியாய உள்ளிட்ட பகுதிகளுக்கான மின்சார விநியோகம் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக தடைப்பட்டது.

பின்னர் காவல்துறையினர் குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, குறித்த நபர் கோபுரத்திலிருந்து கீழிறங்கியதுடன் கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணையின் போது, இந்த சம்பவத்தால் இலங்கை மின்சார சபைக்கு 201,059.90 ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபர், ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை செலுத்த வேண்டும் என மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், மேலதிக விசாரணைக்காக வழக்கு எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

16000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு புதிய விடுதித் திட்டம்

புரட்டாதி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

ஆவணி 22, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

தெஹிவளை ‘நிசல செவன’ மயானத்தில் துப்பாக்கிச்சூடு

ஆடி 19, 2026
இலங்கைஎங்கள் ஊர்

தம்பகல்லவில் புதையல் தோண்டிய நபர் உபகரணங்களுடன் கைது!

ஆனி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube