Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிரான பணமோசடி வழக்கு : மேலதிக விசாரணைக்கு சட்டமா அதிபர் உத்தரவு!

ஆடி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு நேற்று (30) கொழும்பு நீதிவான் அஸங்க எஸ். போதரமை முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணைகள் நிறைவடைந்து கோப்புகள் சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், பான் ஏசியா மற்றும் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கிகளின் கணக்கு அறிக்கைகளைப் பெற்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியதாகவும் CID அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனையடுத்து, வங்கி அறிக்கைகளை விரைவாகப் பெற்று விசாரணை முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஸ்ரேயாஸ் ஐயருக்கு தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவின் சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு

ஆடி 22, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

Cockroach Janata Party-க்கு இந்தியாவில் தடை! – எப்படி ஆரம்பித்தது கரப்பான் பூச்சி ஜனதா கட்சி?

வைகாசி 22, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

சுப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இல்லத்தின் முன்பாக ‘பாபா’ முத்திரை சின்னம் அமைப்பு

புரட்டாதி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

10,000 காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் தேசிய வேலைத்திட்டம்!

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube