சிறைக்கைதிகளை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக கைப்பேசியில் காணொளி பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு குழந்தைகளின் தாயை எதிர்வரும் ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உடுகம பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் ஹிதும ஹல்விட்டிவல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுகம நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக நின்று, தனது கைப்பேசியை காகிதத்தால் மறைத்துக்கொண்டு சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக காணொளி பதிவு செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஏதேனும் குற்றச்செயலுக்காக இந்தக் காணொளியை பதிவு செய்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
