உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (31) மீண்டும் சற்று சரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.71 சதவீதம் குறைந்து 82.16 அமெரிக்க டொலராகவும், ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை 1.16 சதவீதம் குறைந்து 88 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.
மேலும், முர்பான் (Murban) ரக கச்சா எண்ணெய் விலையும் 2.60 சதவீதம் சரிவடைந்து, ஒரு பீப்பாயின் விலை 85.71 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலைச் சூத்திரத்திற்கு அமைய மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தம் இன்று (31) மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
