26ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நேற்று (01) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடமையேற்பதற்கு முன்னர் பத்தரமுல்ல ரணவிரு நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய அவருக்கு, இராணுவத் தலைமையகத்தில் ஆச்சார முறைப்படி அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு Cadating அதிகாரியாக இராணுவத்தில் இணைந்த இவர், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகப் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
