யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (01) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாழ்வதற்கு விருப்பமில்லை எனத் தெரிவித்த நிலையில், இருவரும் தமக்கு தாமே தீ மூட்டியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
