SLS தரச்சான்றிதழ் அற்ற மற்றும் தரமற்ற தலைக்கவசங்களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களைக் கண்டறிவதற்கான விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனம் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவற்றுடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன,
இந்தச் சோதனை நடவடிக்கைகளின் போது கண்டறியப்படும் தரமற்ற தலைக்கவசங்களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு எதிராகத் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தரமற்ற தலைக்கவசங்களை அணிவது, தலைக்கவசம் அணியாமல் செல்வதற்குச் சமமான ஆபத்தானது. எனவே, பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பான முறையில் SLSதரச் சான்றிதழ் பெற்ற தரமான தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
