Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை இன்று மீள ஆரம்பம்

#அமெரிக்கா #ஈரான் #அமெரிக்கஈரான்பேச்சுவார்த்தை #அணுஒப்பந்தம் #சர்வதேசஅரசியல் #உலகசெய்திகள் #Diplomacy #Iran #USA #BreakingNews

ஆவணி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் இன்று (3) முதல் மீண்டும் நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

​ எனினும் ஈரானுடனான உடன்பாட்டை எட்டுவதற்கான காலக்கெடு எதையும் அவர் நிர்ணயிக்கவில்லை.

​ ஹோர்முஸ் நீரிணையை விரைவாக மீண்டும் திறப்பது மற்றும் தெஹ்ரானின் அணுசக்தித் திறன் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஆகியவற்றுக்கான உடன்பாட்டை எட்டும் நோக்கில், உடனடியாக மேற்கொள்ளப்படவிருந்த தாக்குதலைத் தாம் கைவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னதாகக் கூறியிருந்தார்.

​ ஈரானும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளும் நீரிணையை “உடனடியாக, முழுமையாகவும் முற்றாகவும் மீண்டும் திறப்பதற்கும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டுவதற்கும் வழிவகுக்கும் உடன்பாட்டை நிறைவு செய்ய அவகாசம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

​ தெஹ்ரான் விரைவாக ஓர் உடன்பாட்டை எட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

​ இந்நிலையில் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் கூறுகையில், திங்கட்கிழமை பிற்பகல் பேச்சுவார்த்தை தொடங்கும் எனத் தெரிவித்தார்.

​ எனினும், அது எங்கு நடைபெறும் அல்லது யார் பங்கேற்பார்கள் என்பது பற்றிய விவரங்களை அவர் வெளியிடவில்லை.

​ ஈரானுடன் உடன்பாட்டை எட்டுவதற்கு ஏதேனும் காலக்கெடு உள்ளதா என வினவப்பட்டபோது, அதற்குப் பதிலளிக்க ட்ரம்ப் மறுத்துவிட்டார்.

​ அதற்குப் பதிலாக, நான் ஓர் உடன்பாட்டை எட்டவே விரும்புகின்றேன். நான் மனிதர்களைக் கொல்ல விரும்பவில்லை, ஏனெனில் ஏராளமானோர் இறக்கிறார்கள், அதை நாங்கள் விரும்பவில்லை என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

சிங்கப்பெண் அதிரடிப்படை: 2500 புதிய பணியிடங்கள்!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்றுமுதல் மீண்டும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட நால்வருக்கு எதிரான பணமோசடி வழக்கு : மேலதிக விசாரணைக்கு சட்டமா அதிபர் உத்தரவு!

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

HIV தடுப்பு பலப்படுத்தல்!

ஆனி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube