திட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட எலஹெர பகுதி மக்களுக்கு 400 இலட்சம் (40 மில்லியன்) ரூபாய் பெறுமதியான இழப்பீடுகளும் கொடுப்பனவுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
திட்வா சூறாவளி காரணமாக எலஹெர பிரதேச செயலகப் பிரிவும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தது.
பகுதிளவில் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு, பிரதியமைச்சர் டி.பி. சரத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு எலஹெர பிரதேச செயலகத்தில் நடைபெற்றதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி அவர்களும் இதில் கலந்துகொண்டிருந்தார்.
டிட்வா சூறாவளியால் பகுதிளவில் சேதமடைந்த 71 வீடுகளுக்கும், வியாபாரச் சேதங்களுக்காக 7 பேருக்கும், ஜனாதிபதி நிதியத்தின் மூலம் 7 பேருக்கும் இதன்போது இழப்பீடுகளும் கொடுப்பனவுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
