Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

மலையக மக்களின் காணி உரிமை, வீடமைப்பு மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கோரிக்கைகள் ஜனாதிபதியிடம் முன்வைப்பு!

ஆவணி 3, 2026
படிக்க 3 நிமிடங்கள்

தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் பேரவையின் பிரதிநிதிகளுடன் இணைந்து, இன்று (03.08.2026) கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களைச் சந்தித்து விரிவான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

இந்தச் சந்திப்பில், இ.தொ.கா பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், மலையக மக்களின் காணி உரிமை, வீடமைப்பு திட்டங்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முக்கிய கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்ததாக சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

மேலும், இது தொடர்பாக ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு ஜீவன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்…

வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மலையகத்தில் காணி மற்றும் வீடமைப்பு பிரச்சினைகள் இன்னமும் நீண்டகாலமாக தீர்வு காணப்படாமல் தொடர்வதை சுட்டிக்காட்டினேன். இது அரசாங்கத்தின் மீதான விமர்சனம் அல்ல; மாறாக, நீண்டகாலமாக நிலவி வரும் முறைமை சார்ந்த பிரச்சினை என்பதையும் தெளிவுபடுத்தினோம்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் குத்தகை முறை காரணமாக காணிகளை விடுவிப்பதில் பாரிய சிக்கல்கள் நிலவுவதுடன், காணி விடுவிக்கப்பட்டாலும் தோட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே வீடமைப்பு முன்னுரிமை வழங்கப்படும் என்ற நிபந்தனை நடைமுறையில் இருப்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன்.

இந்திய உதவியின் கீழ் மலையக மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த மக்களுக்கு வீட்டுரிமை கிடைத்த போதிலும், நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துவது உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் தெளிவுப்படுத்தினேன்.

மலையக வீடமைப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 5 பில்லியன் ரூபாய் நிதி போதுமானதல்ல என்பதால், எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் அந்த நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தேன். அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, அந்த நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

அதேபோல், கடந்த முறை ஒதுக்கப்பட்ட 7 பில்லியன் ரூபாய் நிதியில் 67% இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியாக இருந்ததை சுட்டிக்காட்டி, மலையக மக்களுக்கான வீடமைப்பில் இலங்கை அரசாங்கத்தின் நேரடி நிதி ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினேன்.

காணி வழங்குவது எளிதான விடயம் அல்ல என்றும், வளங்கள் மற்றும் மலையக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் உள்ளதாக ஜனாதிபதி தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்தக் கருத்துடன் எமக்கு உடன்பாடு இல்லை என்பதையும், மலையக மக்களுக்கு உறுதியான காணி உரிமை வழங்கப்படுவது காலத்தின் கட்டாயம் என்பதையும் உறுதியாக எடுத்துரைத்தோம்.

மேலும், மாகாண சபை என்பது தமிழர்களுக்கு மட்டும் உரிய விடயம் அல்ல; அது இலங்கையின் அனைத்து மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் அவசியமான அதிகாரப் பரவலாக்கத்தின் அடையாளமாகும் என்பதை வலியுறுத்தினோம்.

13 மாவட்டங்களில் 10% முதல் 15% வரை சிறுபான்மையாக வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு தற்போதைய விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் மூலமே உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கிறது. எனவே, தேர்தல் முறை மாற்றப்பட்டால் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், புதிய அரசியலமைப்பு அமுலுக்கு வரும் வரை தற்போதைய தேர்தல் முறையிலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம்.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக நடைமுறை ரீதியான தீர்மானங்கள் எவ்வாறு எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படுகின்றன என்பதை பொறுத்து செயற்படுவோம்
என ஜீவன் தொண்டமான் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்தச் சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட ஆகிய ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கதிர்காம பாத யாத்திரை : திறக்கப்படும் காட்டுவழி!

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரித்தானிய பெண் கைதி ஷார்லட் மே லீ பாதுகாப்பாக உள்ளார்: சிறைச்சாலை அதிகாரிகள் அறிவிப்பு!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்களுக்கு தடை!

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

OMP அலுவலகம் சர்வதேச வழிகாட்டல்களுடனேயே செயற்படுகிறது

ஆனி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube