Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

இராணுவத்தில் இணையும் டென்மார்க் இளவரசி

ஆவணி 6, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

டென்மார்க் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி இசபெல்லா (Princess Isabella) நாட்டின் புதிய கட்டாய இராணுவச் சேவை முறையின் கீழ் பணியாற்ற உள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பத்தாம் ஃபிரடெரிக் மன்னர் மற்றும் மேரி அரசியின் மகள் இளவரசி இசபெல்லா (19), டென்மார்க் அரச குடும்பத்தில் முதல்முறையாக, நாட்டின் புதிய கட்டாய இராணுவச் சேவை முறையின் கீழ் பணியாற்ற உள்ளார். பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற அடுத்த சில வாரங்களிலேயே, டேனிஷ் அரச குடும்பத்தின் கோடை விடுமுறையைத் தொடர்ந்து இசபெல்லா இராணுவப் பணிக்குச் சென்றுள்ளார்.

பாரம்பரியமாக அரச குடும்ப ஆண் உறுப்பினர்களே இராணுவப் பயிற்சி பெற்று வந்தபோதிலும், அரச குடும்பப் பெண் உறுப்பினர்கள் அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயம் இருந்ததில்லை.

ஆனால், ஐரோப்பா முழுவதும், குறிப்பாக ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து பாதுகாப்பு குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், டென்மார்க்கில் பரந்த பாதுகாப்பு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, பெண்களுக்குக் கட்டாய இராணுவச் சேவை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, அவர்கள் கட்டாயம் 11 மாதங்கள் இராணுவச் சேவையாற்ற வேண்டும். அதன்படி, இந்த வாரம் நாடு முழுவதும் சுமார் 1,600 இளம்பெண்கள் பணிக்குச் இணைந்துள்ளனர். கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. இராணுவத்தில் சேருபவர்களுக்கு, வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 9,000 டேனிஷ் குரோனருக்கும் சற்று அதிகமாகவும், அதனுடன் வரி இல்லாத சம்பளமும் வழங்கப்படுகிறது.

ஆனால், இளவரசி தானாகவே முன்வந்து நிராகரித்துவிட்டதாக அரச குடும்பம் உறுதிப்படுத்தியுள்ளது. டேனிஷ் ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, இளவரசி தனது கல்வியின் அடுத்தகட்டத்தை ஒரு வருடம் கழித்து தொடர முடிவுசெய்துள்ளார். இந்தச் சூழலில்தான் டென்மார்க்கின் கட்டாய இராணுவச் சேவை விதிகளில் ஏற்பட்ட மாற்றங்களால், அப்பணியில் இணைந்து உலகில் கவனம் ஈர்த்துள்ளார். முன்னதாக, அவருடைய மூத்த சகோதரரான பட்டத்து இளவரசர் கிறிஸ்டியன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது இராணுவப் பயிற்சியை நிறைவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிபரை 27 முறை கடியால் குத்தி கொலை செய்த மாணவர்கள்

ஆவணி 20, 2026
முக்கியச் செய்திகள்

வாக்களிப்பு முறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்- மஹிந்த தேசப்பிரிய!

வைகாசி 5, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

காஸாவில் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளவரைகலை மீட்பதில் சிரமம்!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி அனுரவின் செயற்பாட்டுக்கு 75% மக்கள் ஆதரவு – ஆய்வில் தகவல்!

ஆடி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube