காஸா பகுதியில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து, கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான மக்களின் சடலங்களை மீட்க, காஸா குடிமைப் பாதுகாப்புப் படைகள் ஒரு சிக்கலான மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.
இருப்பினும், போதுமான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாததால், இந்தப் பணி மிகவும் கடினமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பாலஸ்தீனிய மனித உரிமை அமைப்புகளின்படி, 10,000-க்கும் மேற்பட்டோர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போயிருப்பதாக நம்பப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி, காஸா பகுதியில் உள்ள 90%-க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது சேதமடைந்துவிட்டதாகவும், மேலும் மொத்த இறப்பு எண்ணிக்கை 73,000-ஐத் தாண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
