விலங்குகளின் பாதுகாப்பிற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களால் கண்டி எசல பெரஹரா உள்ளிட்ட இலங்கையின் பாரம்பரியங்களுக்கு எந்தவித தடையும் ஏற்படாது என புத்த சாசன மற்றும் சமய விவகார பிரதியமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (08) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் விலங்கு நலன்புரிச் சட்டங்கள் மூலம் கலாசார விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துவதற்குத் தடைகள் ஏற்படாது எனவும், சில தரப்பினரே இது குறித்து போலியான பிரசாரங்களைப் பரப்பி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
