Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸ் திணைக்களத்தின் பெயரை பயன்படுத்தி இணையவழி மோசடி

ஆவணி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பொலிஸ் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக போலிச் செய்திகளை அனுப்பி, தனிநபர் தரவுகளைத் திருடும் இணையவழி மோசடிகள் இடம்பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு எச்சரித்துள்ளது.

போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாக வாகனம் செலுத்தியதாகக் கூறி பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலிச் செய்திகளை அனுப்பி, மக்களின் தனிப்பட்ட தரவுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவின் பரிமாற்ற அலகுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்நிலையிலேயே பொதுமக்கள் இத்தகைய மோசடிகளில் சிக்கிகொள்ள வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

குறுஞ்செய்திகள் , மின்னஞ்சல் அல்லது ஏனைய செயலிகள் மூலம் வரும் சந்தேகத்திற்குரிய இணைப்புகளை ஒருபோதும் அனுக வேண்டாம்.

எந்தவொரு இணைப்பினூடாகவுவும் உள் நுழைவதுக்கு முன்னர் அனுப்பியவரின் விவரங்கள் மற்றும் இணையதளத்தின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் அடையாளம் தெரியாத இணைப்புகள் மூலம் தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள், ஓடிபி குறியீடுகள் அல்லது கடவுச்சொற்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும், உத்தியோகபூர்வ பொலிஸ் ஊடக அறிக்கைகள் மற்றும் அரசாங்க இணையதளங்கள் ஊடாக மட்டுமே தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான செய்திகள் மற்றும் சமூக வலைத்தளப் பதிவுகள் குறித்து உரிய அதிகாரிகளுக்கு உடனே தெரியப்படுத்துமாறு கோரியுள்ள பொலிஸார், பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கத் தொலைபேசிகளையும் செயலிகளையும் உடனுக்குடன் புதுப்பித்து வைத்திருக்குமாறும், அவசரமாகப் பணத்தைச் செலுத்துமாறு கோரும் செய்திகள் குறித்து அவனத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

ரம்புட்டான் பழத்தினது விதை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

ஆனி 25, 2026
இலங்கைஎங்கள் ஊர்

யாழ்ப்பாணத்தில் அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு செருப்பு மாலை!

ஆனி 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அரபிக்கடலை சென்றடைந்தது ஐஎஸ்எஸ் ஜோர்ஜ் வொஷிங்டன் விமானம் தாங்கிப் போர் கப்பல்

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவிலங்குகளைப் பாதுகாக்க முப்படை கால்நடை மருத்துவ சேவை அழைப்பு

ஆவணி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube