தெஹிவளை, கடவத்தை வீதிப் பகுதியில் நபர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி அத்துருகிரிய, ஹபரகட பகுதியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
