Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அரசு அவதானம்

ஆவணி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

No photo description available.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற “நாடே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபைக் கூட்டத்திலேயே இது தொடர்பாக, விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தக் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியமும், போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்குவது தொடர்பான சட்டத் திருத்தங்களை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

May be an image of one or more people and dais

அத்துடன், வழக்குத் தாமதங்களைத் தவிர்க்கத் தடயவியல் அறிக்கைகள் வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு, கடந்த ஜூலையில் மட்டும் 6,414 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சிறைக் கைதிகளின் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்தக் கைப்பற்றப்படும் போதைப்பொருளின் அளவை வகைப்படுத்தி தரவுகளை வழங்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

May be an image of one or more people and dais

இதேவேளை, அண்மையில் 5 சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மையால் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துச் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், சிறைகளில் பாதுகாப்பு கெமராக்களை நிறுவ நிதி ஒதுக்குமாறும், புனர்வாழ்வு சட்டத் திருத்தங்களை விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலைகளில் போதைப்பொருள் பரவுவதைத் தடுக்க “மிதுரு பாசல” திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கான போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகளை மருந்தகங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

May be an image of dais

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

விபத்தில் பாட்டியும் பேரனும் உயிரிழப்பு

ஆவணி 14, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படை நடத்திய தாக்குதல்: 15 வயது சிறுவன் பலி

ஆனி 29, 2026
இலங்கைஉலகம்

பெந்தோட்டையில் பராமோட்டர் விபத்து: பாலஸ்தீன பெண் உயிரிழப்பு!

ஆடி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனை!

ஆடி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube