Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைதொழில்நுட்பம்

iphone பாவனையாளர்களின் வட்ஸ்அப் (WhatsApp) கணக்குகளை இலக்குவைத்து இணையவழி தாக்குதல்

ஆகஸ்ட் 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

iphone பாவனையாளர்களின் வட்ஸ்அப் (WhatsApp) கணக்குகளை இலக்குவைத்து ‘ஸீரோ க்ளிக்’ (Zero-click) வகையிலான புதிய இணையவழி தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழுவுக்கு (SLCERT) முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் எந்தவொரு போலி இணைப்புகளையும் (Links) click செய்யாத நிலையிலும், அல்லது QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாத நிலையிலும், அவர்களின் வட்ஸ்அப் கணக்குகளை இணைய ஊடுருவிகள் (Hackers) தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வகையில் இந்தத் தாக்குதல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய iOS பதிப்புகளில் இயங்கும் ஐபோன்களே இந்தத் தாக்குதலினால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், இலங்கையின் ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தகச் சமூகத்தைச் சேர்ந்த பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு ஊடுருவப்பட்ட வட்ஸ்அப் கணக்குகள் மூலம் மற்றவர்களுக்குப் பணமனுப்புமாறு கோரி போலிச் செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

iOS 16.7.12 க்கும் பழைய பதிப்புகளைப் பயன்படுத்தும் ஐபோன் பயனர்களே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க ஐபோன் பயனர்கள் உடனடியாகத் தமது தொலைபேசிகளின் iOS பதிப்பையும், வட்ஸ்அப் செயலியையும் அண்மைய பதிப்புக்கு புதுப்பிக்குமாறு (Update) இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன், வட்ஸ்அப் கணக்குகளில் இருபடிச் சரிபார்ப்பு (Two-Step Verification) மற்றும் ‘செட் லாக்’ (Chat Lock) ஆகிய பாதுகாப்பு அம்சங்களை உடனடியாகச் செயற்படுத்துமாறும், தெரிந்த நபர்களிடம் இருந்து பணக் கோரிக்கைகள் வந்தால் தொலைபேசி அழைப்பு மூலம் அதனை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

உலப்பனே சுமங்கல தேரர் உள்ளிட்ட குழுவினருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

அக்டோபர் 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் வழக்கு – தீர்ப்பு நாளை

செப்டம்பர் 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பானங்களுக்கான சர்க்கரை அளவு வண்ணக் குறியீட்டு விதிமுறைகளில் திருத்தம்

ஜூலை 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த சரக்கு கப்பல் மீது தாக்குதல்

செப்டம்பர் 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube