பிரான்ஸில் நுகர்வோரின் முன் அனுமதியின்றி வணிக நோக்கத்திற்காக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதற்கு நாடு முழுவதும் புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 11, 2026 முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிமுறைகளின்படி, விற்பனை நோக்கில் நுகர்வோரை தொலைபேசி மூலம் தொடர்புகொள்வதற்கு முன்னர், குறித்த நபர் அதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதை நிறுவனங்கள் நிரூபிக்க வேண்டும்.
இதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த முறையில், தேவையற்ற வணிக அழைப்புகளைத் தவிர்க்க நுகர்வோர் தாமாகவே மறுப்பு தெரிவிக்க வேண்டியிருந்தது.
எனினும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒப்பந்தம் தொடர்பான சில அழைப்புகளுக்கு வரையறுக்கப்பட்ட விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
தேவையற்ற வணிக அழைப்புகள் மற்றும் தொலைபேசி மோசடிகளை குறைத்து, நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படலாம். தனிநபர்களுக்கு அதிகபட்சமாக 75,000 யூரோக்களும், நிறுவனங்களுக்கு 375,000 யூரோக்களும் அபராதம் விதிக்கப்படலாம்.
