ஹோமாகம, கந்தலந்த பகுதியில் நேற்று (11) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது, 2 கிலோ 59 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹோமாகம காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 57 வயதுடைய ஹோமாகம பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
