யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்புதைகுழியில் மூன்றாம் கட்ட 50 ஆவது நாள் அகழ்வு பணிகள் நேற்று (12) நடைபெற்றது.
இதன் போது , 05 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 06 என்புக்கூடுகள் அகழப்பட்டுள்ளது.

இதுவரையில் 544 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , 530 என்புக்கூடுகள் முழுமையாக அகழப்பட்டுள்ளது.
அதேவேளை புதைகுழிக்கு அருகில் எழுமாறாக தோண்டப்பட்ட இரு சோதனைக்குழிகளில் இருந்தும் நேற்றைய தினமும் என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சான்று பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் சிலவற்றின் உத்தியோகபூர்வ புகைப்படங்கள் எடுக்கப்பட்டு , அந்த புகைப்படங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
