Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

ஆவணி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

​கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டாவது கடற்றொழில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம்(12) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

​குறித்த கலந்துரையாடலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் பங்கேற்றதுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடியதோடு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் தொடர்பில் பல விடயங்களை முன்வைத்திருந்தார்.

​குறிப்பாக, தட்டுவன்கொட்டி பகுதியில் மக்களின் வாழ்வாதாரக் காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் உரிய தீர்வினை வழங்குமாறு வலியுறுத்திய நிலையில், அதற்கு ஒரு வார காலத்திற்குள் உடனடித் தீர்வு எட்டப்படும் என அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டது.

​அதேபோன்று இரணைமடு நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்கள், சாந்தபுரம் பகுதி மீனவர்கள், பள்ளிக்குடா மீனவ உறவுகள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்களினால் பதிலளிக்கப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகள் விரைவாக வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

​கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித கமல் ஜினதாச, மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூலை 4 இல் சபரகமுவ பல்கலைக்கழக மருத்துவப் பீடம் திறப்பு!

ஆடி 3, 2026
இலங்கை

வாகன இறக்குமதி குறையவில்லை – சுங்கத் துறை வருவாய் தொடர்ந்து உயரும் என அறிவிப்பு!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறியளவில் மாற்றம் பதிவாகியுள்ளது.

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொசன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

ஆனி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube