Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

91 ஆயிரத்தை கடந்துள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

ஆவணி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்று வியாழக்கிழமை வரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91,346 ஆக உயர்ந்துள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், டெங்கு நோய் காரணமாக 68 மரணங்களும் இதுவரை பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர்.

இதன்படி, ஜூலை மாதத்தில் மாத்திரம் 29,968 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதனிடையே, இம்மாதத்தின் நேற்றைய தினம் வரையிலான கடந்த 13 நாட்களில் 6,004 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டின் இதுவரை கழிந்த காலத்தில் அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளனர்.

இதன்படி மேல் மாகாணத்தில் 48,383 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதேபோல், தென் மாகாணத்தில் 13,479 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,160 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

உடப்பு கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கண்டுபிடிப்பு!

ஆனி 23, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

தெஹிவளை ‘நிசல செவன’ மயானத்தில் துப்பாக்கிச்சூடு

ஆடி 19, 2026
இலங்கைஉலகம்

தெற்காசியாவில் இரண்டாவது அமைதியான நாடாக இலங்கை!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெணியாய கல்வி வலய 4 பாடசாலைகள் நாளை (மே 8) மூடப்படும்!

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube