Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கண்டனப் போராட்டம்!

#வவுனியா #அபிவிருத்திஉத்தியோகத்தர்கள் #கண்டனப்போராட்டம் #போராட்டம் #அரசுஊழியர்கள் #வவுனியாசெய்திகள் #இலங்கைசெய்திகள் #தமிழ்செய்திகள் #SriLankaNews #Vavuniya #TamilNews #BreakingNews

ஆவணி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வடமாகாண சபையின் முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில், வடக்கில் முக்கிய பொறுப்புக்களில் உள்ள அதிகாரிகள் சிலர் கூடி விரும்பத்தகாத கருத்துக்களை தங்களிடையே பகிர்ந்து கொண்டமை தொடர்பிலான ஒலி பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தன.

குறித்த ஒலிப்பதிவில் , உள்ள குரல்கள் தொடர்பில் ஆய்வு செய்து , அந்த குரல்களுக்கு உரிய அதிகாரிகளை இனம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் வலியுறுத்தி வந்தனர்

இந்நிலையில் , சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வடமாகாண அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் , வடமாகாண சபையின் முன்பாக கண்டன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டார்.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கும் வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் மகஜர் கையளித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு நீதிமன்ற சிறைக்கூட்டில் கைதி தற்கொலை முயற்சி

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருமளவிலான போதைப்பொருள்களுடன் 32 வயது இளைஞன் கைது

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி ஆவணங்கள் தயாரித்த மூவர் கைது!

ஆனி 6, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க மத்திய ஃப்ளோரிடா கடற்பகுதியில் தனியார் விமானமொன்று விபத்திலுள்ளானது!

வைகாசி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube