இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 17ஆம் திகதி அமெரிக்க டொலருக்கு எதிராக மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 329.03 ரூபாவிலிருந்து 328.27 ரூபாவாக குறைந்துள்ளது.
அத்துடன், டொலரின் விற்பனை விலையும் 337.99 ரூபாவிலிருந்து 337.34 ரூபாவாகக் குறைந்துள்ளது.
எனினும், சில வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வளைகுடா நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக மேலும் வலுவடைந்துள்ளது.
