தித்வா புயலால் சேதமடைந்த கொட்டகலை இரயில் பாதையை மீளமைக்கும் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நிலச்சரிவால் சேதமடைந்த பகுதிகளில் மண் மற்றும் பாறைகளை அகற்றி, பாதையின் அடித்தளத்தை வலுப்படுத்தி, இரயில் பாதையை மீளமைக்கும் பணிகள் கட்டம் கட்டமாக இடம்பெற்று வருகின்றன.
இரயில் போக்குவரத்தை மீள ஆரம்பிக்கும் வகையில் பாதையின் பாதுகாப்பு மற்றும் சரிவுகளின் உறுதித்தன்மைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நானுஓயாவிலிருந்து கண்டி வரையிலான இரயில் பாதைகளை சீரமைக்கும் பணிகளில் இலங்கை இரயில்வே திணைக்கள ஊழியர்கள் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மலையக இரயில் பாதையில் மீண்டும் இரயில் சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
