இலங்கை ஜனநாயக குடியரசுக்கும், போலந்து குடியரசுக்கும் இடையில் குற்றவாளிகளை ஒப்படைத்தல் தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நபர்களுக்கு குறித்த தண்டனையை தமது தாய் நாட்டிலேயே அனுபவிப்பதற்கு வாய்ப்புக்களை வழங்கி அவர்களுடைய சமூகப் புனர்வாழ்வுக்கு பங்களிப்பு வழங்கக்கூடிய வகையில், இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்படவுள்ளது.
குற்றவாளிகளை ஒப்படைத்தல் தொடர்பாக இலங்கைக்கும் போலந்து குடியரசுக்கும் இடையிலான ஒப்பந்தம்
இலங்கையில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட வேறொரு நாட்டுப் பிரஜைக்கு, அவருடைய தாய் நாட்டில் தண்டனையை அனுபவிப்பதற்கு இயலுமாகும் வகையில் 1995 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க குற்றவாளிகளை இடமாற்றுதல் சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், வேறொரு நாட்டில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜை ஒருவர், தன்னுடைய எஞ்சிய தண்டனைக் காலத்தை இலங்கையில் கழிப்பதற்கு மீண்டும் இலங்கைக்கு ஒப்படைப்பதற்கு இச்சட்டத்தின் மூலம் ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.
