கிளிநொச்சி ஏ9 வீதி, பரந்தன் சந்தியிலுள்ள பொலிஸ் வீதிச் சோதனைச்சாவடியில், இன்று புதன்கிழமை காலை, பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கி சட்விரோத மணலை கொண்டு செல்ல முற்பட்ட டிப்பர் வாகன சாரதிகள் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களின் ஐந்து டிப்பர் வாகனங்களும், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களையும், நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
