Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்முனை தாதியர் ஆடை விவகாரம் : இராமநாதன் அர்ச்சுனாவின் கோரிக்கை

ஆவணி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது முஸ்லிம் தாதியர்கள், தலை மற்றும் கால்களை மூடும் வகையிலான ஆடைகளை அணிந்து பணிக்கு வந்தபோது, அங்குள்ள சில ஊழியர்களால் தடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த விடயத்தை முன்வைத்தார்.

ஏனைய அரச வைத்தியசாலைகளில் தாதியர்கள் தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப தலை மற்றும் கால்களை மூடும் வகையிலான ஆடைகளை அணிந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மாத்திரம் ஏன் இவ்வாறான கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என அவர் கேள்வி எழுப்பினார்.

தாதியர்களின் மத நம்பிக்கைகளையும் தனிப்பட்ட உரிமைகளையும் மதிப்பது அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், குறித்த சம்பவம் வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட ஆடை தொடர்பான பழைய சுற்றறிக்கையை மறுபரிசீலனை செய்து, தாதியர்கள் தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப ஆடை அணிந்து பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் வகையில் உடனடியாக புதிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு சுகாதார அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கோரிக்கை விடுத்தார்.

இந்த விவகாரத்தை இனவாதக் கண்ணோட்டத்தில் அணுகாமல், மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அனைத்து சமூகங்களினதும் மத உணர்வுகள், உரிமைகள் மற்றும் ஆடை அணியும் சுதந்திரத்தை மதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் நியாயமான அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்படுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அனைத்து சமூகங்களுக்கும் சம உரிமையும் சம வாய்ப்புகளும் உறுதி செய்யப்படுவது அவசியம் எனவும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

முதலமைச்சரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கண்டனம்

புரட்டாதி 7, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரான் – அமெரிக்கா மோதல் தீவிரம்!

ஆடி 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா–ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூபாயின் விலை வீழ்ச்சி

வைகாசி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube