மொனராகலை, 14வது கனவப் பகுதியில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியானதுடன் மூவர் காயமடைந்த பெருஞ் சோகச் சம்பவம் இன்று(21) காலை பதிவாகியுள்ளது.
இவ் விபத்தானது மொனராகலை, 14வது கனவப் பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
புட்டாலையிலிருந்து கபிலவத்தை முருகன் கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் புட்டாலையிலிருந்து வந்த டிப்பர் லொரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் உழவு இயந்திரத்தில் இருந்த ஐந்து பேர் உயிரிழந்தனர், காயமடைந்த மூவர் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
