அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை கடல்வழியாக வந்தடைந்த 14 லம்போகினி சொகுசு வாகனங்கள், வான்வழியாக துபாய் மற்றும் டோஹாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

ஏழு 40 அடி கொள்கலன்களில் அடைக்கப்பட்டுள்ள இச் சொகுசு வாகனங்கள், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வான்வழியாக அனுப்பி வைக்கப்படவுள்ளன.

மேற்காசியாவிற்கான பாரம்பரியக் கடல்வழிப் போக்குவரத்தில் தடங்கல்கள் மற்றும் தாமதங்கள் நிலவி வரும் பின்னணியில், கடல் மற்றும் வான்வழி இணைந்த சர்வதேச சரக்கு மறுஏற்றுமதி மையமாக இலங்கை உருவெடுத்து வருவதை இந்த நடவடிக்கை தெளிவுபடுத்துகிறது.
