Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாணசபைத் தேர்தலை நடத்த இளைஞர் பிரதிநிதித்துவ கருத்துக்களை பெற தீர்மானம்

ஆவணி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

புதிய தேர்தல் முறைமைக்கு அமைவாக மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் இளைஞர் பிரதிநிதித்துவம் குறித்து கருத்துக்களை பெற வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் குழு கூட்டத்தின் போது இளைஞர் பிரதிநிதிகளை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொகுதிகளை மீண்டும் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் என குழுவில் அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், குழுவின் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர்.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் செயற்குழு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி தமது விதப்புரை அறிக்கைளை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் குழுவின் காலம் நீட்டிக்கப்பம் சாத்தியம் காணப்படுகிறது.

மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் ஆராயும் விசேட செயற்குழு அதன் தலைவர் விஜித்த ஹேரத் தலைமையில் கூடியது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் குழுவுக்கு பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது பெண் பிரதிநிதித்துவத்தை போன்று இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் கருத்துக்களை கோர வேண்டும் என்று ஆளும் கட்சியின் குழு உறுப்பினர்கள் குழுவில் யோசனை முன்வைத்துள்ளார்கள்.

அதற்கமைய எதிர்வரும் எதிர்வரும் குழு கூட்டத்துக்கு இளைஞர் பிரதிநிதிகளை அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விசேட தேவையுடையவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் ‘தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்காமல்,புதிய நெருக்கடிகளை உருவாக்கும் வகையில் தான் குழு செயற்படுகிறது’ என அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

நானுஓயாவில் மணல் ஏற்றிச் சென்ற லொறி விபத்து – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

ஆனி 9, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மட்டக்குளியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஓட்டமாவடியில் வீட்டு முன் நிறுத்திய மோட்டார் சைக்கிள் திருட்டு

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நீக்குமாறு SLPP கோரிக்கை!

வைகாசி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube