Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கையர்கள் தாயகம் திரும்ப மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டம் தொடர்பில் ஐ.நா சபை வரவேட்பு

ஆவணி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகள் தாமாக முன்வந்து மீண்டும் தாயகம் திரும்புவதை எளிதாக்கும் வகையில் குடியுரிமை நடைமுறைகளை இலங்கை அரசு தளர்த்தியுள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.

1983 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக, ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

இதனையடுத்து, 2002 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சுமார் 18 ஆயிரம் பேர் தாயகம் திரும்பிய போதிலும், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் இந்தியாவில் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில், போரின் போது முறையான கடவுச்சீட்டு அல்லது அனுமதி பெற்ற துறைமுகங்களைப் பயன்படுத்தாமல் இந்தியா சென்றவர்கள், தங்கள் இலங்கைச் சான்றை உறுதிப்படுத்தினால், தடையின்றி தாயகம் திரும்ப அனுமதிக்கப்படுவர் என இலங்கை அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

இந்த முடிவை வரவேற்றுள்ள இலங்கைகான ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச், அகதிகள் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் தாயகம் திரும்புவதற்கும், அவர்களின் மறுவாழ்வுக்கும் தேவையான உதவிகளைத் தொடர்ந்து வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கரடியனாறு பகுதியில் யானை தாக்கி 76 வயது முதியவர் பலி!

வைகாசி 4, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

பென்குயின்களுக்கு, புதிய சிகிச்சை உடையொன்றை சிலி ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

புரட்டாதி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதி அபாய டெங்கு வலயங்களாக 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அறிவிப்பு!

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெல்தெனியவில் காரொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

ஆனி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube