Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

இம்ரான் கானின் உடல்நலம் குறித்து பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம்

ஆவணி 24, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான இம்ரான் கானின் உடல்நலம் மற்றும் மருத்துவ சிகிச்சை தொடர்பில், இலங்கையின், உலகக் கிண்ணத்தை வென்ற முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட் அணிகளின் முன்னாள் தலைவர்கள் அடங்கிய குழுவொன்று, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

இம்ரான் கானை மருத்துவமனையில் அனுமதித்து, அவரது தனிப்பட்ட மருத்துவர்கள் மற்றும் சகோதரியான மருத்துவர் உஸ்மா கான் அடங்கிய மருத்துவக் குழுவின் மூலம் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், குடும்பத்தினரின் வாராந்த சந்திப்புகளை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், அது முறையாகச் செயல்படுத்தப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், இம்ரான் கான் சில மணிநேரங்கள் மட்டுமே மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்ததுடன், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மருத்துவக் குழுவினால் பரிசோதிக்கப்பட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள முன்னாள் தலைவர்கள், மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அதன்படி, இம்ரான் கானின் வலது கண் பார்வை இழப்பு தொடர்பில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட மருத்துவக் குழாமின் மூலம் சுயாதீனமாக பரிசோதனை நடத்தப்பட வேண்டும், வாராந்த குடும்பச் சந்திப்புகள் தடையின்றி அனுமதிக்கப்பட வேண்டும் மற்றும் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளாக அல்லாமல் முன்னாள் சக வீரர்களாகவும் போட்டியாளர்களாகவுமே இந்தக் கடிதத்தை எழுதுவதாகவும், பாகிஸ்தானின் உள்நாட்டுச் சட்ட நடைமுறைகளில் தலையிட விரும்பவில்லை என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்த அவசரக் கோரிக்கையில் அர்ஜுன ரணதுங்கவுடன் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், ஆலன் போடர், ஸ்டீவ் வோக், கிரெக் செப்பல், இயன் செப்பல், கிளைவ் லொயிட், அலஸ்டயர் குக், அடம் கில்கிறிஸ்ட், நாசர் ஹுசைன் மற்றும் டேவிட் கோவர் உள்ளிட்ட பல பிரபல முன்னாள் வீரர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இதேவேளை, இம்ரான் கானின் கண் பாதிப்பு மற்றும் சிறையில் சரியான சிகிச்சை அளிக்கப்படாதமை குறித்து பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பப்பட்ட இரண்டாவது முறையீட்டுக் கடிதம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறை விரைவில் நிவர்த்தி செய்யப்படும்!

புரட்டாதி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கடல் கொந்தளிப்பாக காணப்படும் – கடற்றொழிலாளர்கள் அவதானம்

புரட்டாதி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடு திரும்ப விரும்பும் அகதிகள் தொடர்பில் கேள்விகளை முன்வைத்த சாணக்கியன்

ஆவணி 20, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

வண்டரித்த அரிசி விற்பனை-கடை உரிமையாளருக்கு அபராதம்!

ஆடி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube