காணாமல் போனதாகக் கூறப்பட்ட, பதுளை போதனா மருத்துவமனையைச் சேர்ந்த விசேட மருத்துவ நிபுணர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹியங்கனை, மாபாகட 17ஆம் கட்டைப் பகுதியில் உள்ள வியானா கால்வாய்க்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கார் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறித்த கார் நேற்று (23) இரவு முதல் அங்கு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அது காணாமல் போனதாகக் கூறப்பட்ட மருத்துவருக்குச் சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் இருந்து மருத்துவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சடலத்திற்கு அருகில் சில மருந்து மாத்திரைகளும் கண்டெடுக்கப்பட்டதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மஹியங்கனைக் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
