Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

ஆவணி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் நிலவும் எல் நினோ காலநிலை காரணமாக நீர்நிலைகள் வற்றி வருவதனால், மின் உற்பத்திக் திறன் குறைவடைந்து மின்சாரத்துக்கான கேள்வி அதிகரிக்கும் சாத்தியக்கூறு காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையினால் நாட்டில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் ஊடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கான புதிய கட்டணக் கட்டமைப்பு தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நிலவும் வானிலை மாற்றங்கள் காரணமாக மின்கல சேமிப்பு அமைப்புகளில் சுமார் 450 மெகாவோட் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என்றும், இதனால் தடங்கலற்ற மின் விநியோகத்தை உறுதி செய்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, மின்சாரக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகமான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மறுசீரமைக்கக்கூடிய சக்தி மூலங்களின் இணைப்பை விரிவுபடுத்துவதுடன், போதுமான சேமிப்புத் திறனைப் பராமரிப்பதன் மூலம் இந்தச் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அமைச்சர் விஜித்த ஹேரத் நியூஸிலாந்தின் அமைச்சர் டாட் மெக்லேவுடன் சந்திப்பு!

வைகாசி 29, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் பாஜக 184 தொகுதிகளில் முன்னிலையில்!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பழுதடைந்த உணவினை வழங்கிய உணவக நிர்வாக நடத்துனருக்கு விளக்கமறியல்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

5 ஆம் தர பரீட்சை – வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக 56,000 பேர் பெற்று சித்தி

புரட்டாதி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube