டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மீன் வளர்ப்பாளர்களுக்கு சுமார் 16 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று (24) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்துகொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கினார்.
இதன்போது, புயலால் பாதிக்கப்பட்ட 31 பயனாளிகளுக்கு ரூ.14.25 மில்லியன் நிதியுதவியும், குளங்களில் மீன் குஞ்சு உற்பத்தி செய்யும் 5 சங்கங்களுக்கு ரூ.1.75 மில்லியன் நிதியுதவியும் வழங்கப்பட்டன.
