உலகளாவிய ‘எல் நினோ’ காலநிலை மாற்றத்தினால் அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாத வண்ணம், சந்தையில் நிலையான விலையைப் பேணுவதற்கு வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு சிறப்பு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில், பருப்பு, உருளைக்கிழங்கு, உப்பு, கருவாடு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தற்போதைய கையிருப்பு மற்றும் சுங்கத் திணைக்களத்தின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களால் நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க இறக்குமதியாளர்களுடன் இணைந்து கூட்டாக செயற்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே வீண் அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர், அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தையும் விலை நிலவரத்தையும் தொடர்ச்சியாகக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
