கொழும்பு புறக்கோட்டை புதிய மத்திய பேருந்து நிலையத்திற்குள் வெற்றிலை எச்சில் உமிழ்ந்தும், சிறுநீர் கழித்தும் பிடிபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தாங்கள் அசுத்தப்படுத்திய இடங்களை தாமே சுத்தம் செய்ய வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு மூலம் பல பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உட்பட பயணிகள் என பேருந்து நிலையத்தை அசுத்தப்படுத்திய பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஏழு மாதங்களில், சிசிடிவி கெமராக்களில் 1,286 சம்பவங்களைப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், திருட்டு, சொத்து சேதம் மற்றும் பிற குற்றங்களுடன் தொடர்புடைய 64 சந்தேக நபர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
