வென்னப்புவ வாய்க்கால் பகுதியில் ரயிலில் மோதி மிதிவண்டி செலுத்துனர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை (25) கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
மேலும், இச் சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
