தலைமன்னார் புகையிரத வீதிப் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தலைமன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணாவார்.
குடும்பத் தகராறு முற்றியதன் காரணமாகவே உயிரிழந்த பெண்ணின் கணவரால் இக் கொலைச் சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
32 வயதுடைய சந்தேகநபரான கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இச் சம்பவம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
