Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

133 இந்தியர்கள் உட்பட பல நாட்டு சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் மாயம்

#நேபாளம் #Nepal #நிலநடுக்கம் #உயிரிழப்பு #பலிஎண்ணிக்கை #BreakingNews #NepalEarthquake #DeathToll #LatestNews

ஆவணி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நேபாளம் மற்றும் சீனாவுக்கு உட்பட்ட திபெத் பிராந்தியத்தில் நேற்று ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 177 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் மலை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பேரழிவில் சிக்கி இதுவரை 900-க்கும் மேற்பட்ட நபர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புக் குழுவினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போனவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த 295 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 133 பேரும் அடங்குவர். மேலும் அமெரிக்கா, உக்ரைன், அவுஸ்திரேலியா, பிரித்தானியா, கனடா, மலேசியா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இதில் மாயமாகியுள்ளனர்.

வெளிநாட்டினர் மட்டுமின்றி, அடையாளம் காணப்படாத 265 நபர்களின் விபரங்களை சேகரிக்கும் பணிகளிலும் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சீரற்ற வானிலை காரணமாக பல இடங்களில் தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இராணுவம் மற்றும் உள்ளூர் மீட்புப் படைகள் மீட்பு உபகரணங்களுடன் ஈடுபட்டு வருகின்றன.

வெள்ள அபாயம் இன்னும் நீடிப்பதால், ஆற்றோரங்களில் வாழும் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு உள்ளூர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. உயிரிழப்பு மற்றும் காணாமல் போனோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றப் பங்களிப்பில் குவைத் முதலிடத்தில் உள்ளது!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலியான இலங்கை தரச்சான்று இலச்சினையுடன் 8500 குடிநீர் போத்தல்கள் கைப்பற்றல்

ஆவணி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டில் டெங்கு பாதிப்பு 73,455 ஆக அதிகரிப்பு!

ஆடி 17, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

மாற்றத்துக்கு தயாராகும் தமிழக காவல்துறை

வைகாசி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube