Mood of the Nation அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவுகளில் பாரதிய ஜனதாக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என புதிய கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
Mood of the Nation அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவுகளில் நரேந்திர மோடியின் செல்வாக்கு குறையாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
இன்று தேர்தல் நடைபெற்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணி 326 இடங்கள் வெற்றி பெறும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நடத்திய இதே ஆய்வில் 352 இடங்கள் மோடிக்கு கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறின. ஆனால் 8 மாதங்களில் மோடி அரசுக்கு 26 இடங்கள் குறைந்துள்ளன.
இளைஞர்களின் போராட்டம், இளைஞர்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான மனநிலை போன்றவை இருப்பதாக சொல்லப்பட்டாலும், மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான என்டிஏவுக்கு செல்வாக்கு பெருமளவில் குறையவில்லை என்பதே தெரிகிறது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 185 இடங்கள் கிடைக்கும் என்று ஆய்வு கணித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வெளியான சர்வேயில் 182 இடங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு என்று கணிக்கப்பட்டு இருந்தது.
இதை வைத்து பார்க்கும் போது கடந்த 8 மாதங்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு சற்று செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக தெரிகிறது.
இளைஞர்களின் போராட்டம், இளைஞர்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான மனநிலை போன்றவை இருப்பதாக சொல்லப்பட்டாலும் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான என்டிஏவுக்கு செல்வாக்கு பெருமளவில் குறையவில்லை என்பதே தெரிகிறது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 185 இடங்கள் கிடைக்கும் என்று கணித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் வெளியான சர்வேயில் 182 இடங்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு என்று கணிக்கப்பட்டு இருந்தது.
இதை வைத்து பார்க்கும் போது கடந்த 8 மாதங்களில் காங்கிரஸ் கூட்டணிக்கு சற்று செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக தெரிகிறது.
இந்த ஆய்வு 2026 ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரையில் நடத்தப்பட்டுள்ளது.
நாட்டின் அடுத்த பிரதமராக யாரை விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழக முதல்வர் விஜய்க்கு ஆதரவாக 9.2 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மோடி என்று 48.7 சதவீதம் பேரும், ராகுல் காந்திக்கு 27.1 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் தமிழக முதல்வரான விஜய், பிரதமர் களத்திலும் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கிறார் என்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
