Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மரக்கிளைகளை வெட்ட முயன்ற இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கியதில் வைத்தியசாலையில் அனுமதி

ஆவணி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

வட்டவளை குயில்வத்தை பகுதியில் மரம் வெட்டுவதற்காக சென்ற இரு பாடசாலை மாணவர்கள் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கி மரத்தில் சிக்கிய நிலையில், பொலிஸாரின் துரித நடவடிக்கையால் மீட்கப்பட்டுள்ளனர்.

வட்டவளை குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் 7 மற்றும் 8ஆம் தரங்களில் கல்வி பயிலும் 12 மற்றும் 13 வயதுடைய இரு மாணவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

May be an image of one or more people, car, ambulance and text

 

தமது வீட்டிற்கு மேல்பகுதியில் உள்ள புதர்நிறைந்த பகுதியில் காய்ந்திருந்த மரக்கட்டைகளை வெட்டுவதற்காக மரத்தில் ஏறியபோது, மரத்திற்கு மேலாகச் சென்றிருந்த உயர் மின்னழுத்த மின்கம்பிகள் மரத்துடன் உரசியதன் காரணமாக மின்சாரம் மரத்தின் ஊடாகக் கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் மின்சாரம் தாக்கிய மாணவர்கள் அலறிய நிலையில் இருந்ததை அவதானித்த தோட்டத் தொழிலாளர்கள், அந்த வீதியில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த வட்டவளை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பொலிஸ் கான்ஸ்டபிள் சஞ்சீவ என்பவருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

May be an image of slow loris

இதனையடுத்து, குறித்த பொலிஸ் அதிகாரி உடனடியாக வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன கமகே ஊடாக நோட்டன்பிரிட்ஜ் மின்சார வாடிக்கையாளர் சேவை நிலையத்தின் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதன்பேரில், குறித்த உயர் மின்னழுத்த மின்கம்பி அமைப்பின் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் இரு மாணவர்களையும் பாதுகாப்பாக மீட்டு வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

May be an image of one or more people, slow loris and hospital

மின்சாரம் தாக்கிய மாணவர்களில் ஒருவரின் உடலில் பல இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றைய மாணவருக்கு அதிர்ச்சி நிலை மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மின்கம்பிகளுடன் உரசிய நிலையில் காணப்பட்ட மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்

வாக்களிப்பு முறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்- மஹிந்த தேசப்பிரிய!

வைகாசி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பௌர்ணமி தினத்தையொட்டி ஹட்டன் அஞ்சல் அலுவலகத்தில் இன்று அன்னதானம்!

ஆனி 28, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் 49 அடி உயர சிவன் சிலை அமைக்கும் பணி!

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல், சாவகச்சேரி உப தவிசாளர் நீக்கத்துக்கு கண்டனம்

ஆனி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube