Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Uncategorized

உலகின் முன்னணி கொள்கலன் துறைமுகங்களின் தரவரிசையில் கொழும்பு துறைமுகம் 20 ஆவது இடத்தில்

ஆவணி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கையின் கடல்சார் வலிமையை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், உலகின் முன்னணி கொள்கலன் துறைமுகங்களின் தரவரிசையில் கொழும்பு துறைமுகம் 26ஆவது இடத்திலிருந்து 20ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கொழும்பு துறைமுகம் 4.44 மில்லியன் TEU கொள்கலன்களை கையாண்டுள்ளதுடன், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 11.9 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் கையாளப்பட்ட மொத்த கொள்கலன்களில் பெரும்பகுதி மறுகப்பல் (Transshipment) நடவடிக்கைகளாக அமைந்துள்ளன.

ஆசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் முக்கிய இந்து சமுத்திர மறுகப்பல் மையமாக கொழும்பு துறைமுகத்தின் முக்கியத்துவத்தை இந்த முன்னேற்றம் மேலும் உறுதிப்படுத்துவதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது இலங்கையின் கடல்சார் மற்றும் பொருளாதார இலக்குகளை முன்னெடுப்பதில் முக்கிய மைல்கல்லாகும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

Uncategorized

நீட் தேர்வுக்கு எதிராக களமிறங்கும் திரை நட்சத்திரங்கள்:

ஆடி 23, 2026
Uncategorized

180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துகின்றவர்களுக்கு 18% கட்டண அதிகரிப்பு!

வைகாசி 9, 2026
Uncategorized

மாற்றுத்திறனாளிகள் உரிமை மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக நிலஷானி டி சில்வா!

ஆனி 6, 2026
Uncategorized

ஆசிரியர்களுக்கான தடைத்தாண்டல் பரீட்சைக்கான விண்ணப்பங்கள்

ஆவணி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube